சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது.!

26

புத்தளம் களப்பு அருகில் 11 இளைஞர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் கூறுகையில் புத்தளத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

விசாரணைகளில் இருந்து வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

கடல் மார்க்கமாக பிரான்ஸ் குறித்த 11 பேரும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமான நிலையில், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் பெண்ணாவார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கலே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று மாலை புத்தளம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தும் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here