பூங்காவில் உயிருக்கு போராடிய 40க்கும் மேற்பட்டோர்!

55

சீனாவில் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறினால் அந்தரத்தில் தொங்கிய 40க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹூனான் (Hunan) மாகாணத்தின் சங்ஷா (Changsha) என்ற இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏராளமானோர் பல்வேறு ராட்டினங்களில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ராட்டினத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அதில் இருந்த 20 குழந்தைகள் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 70 அடி உயரத்தில் தொங்கியவாறு தவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here