381 குடும்பங்களை மீள்குடியமர்த்த அரசு நடவடிக்கை !

52

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்கின்றனர்.

பெறும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய மக்களையும் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.

இதற்கமைவாக தனியார் காணிகளை கொள்வனவு செய்து அவற்றிவ் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

யுத்தக்காலங்களில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வசித்த வந்த 381 குடும்பங்களுக்கான காணிகளை பெற்று கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மாணித்தள்ளது.

யுத்தக்காலங்களின் போது 25 அகதிமுகாம்களில் இடம்பெயர்ந்து வசித்துவந்த 577 குடும்பங்களில் 381 குடும்பங்கள் சொந்த காணிகள் அற்றவர்களாக இருக்கின்றனர்.

இவர்களுக்கான காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் யாழ்பாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதியளவான காணிகள் காணப்படாமையினால் பாரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்காக தனியாருக்குச் சொந்தமான காணிகளை கொள்வனவு செய்து வழங்குவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here