கடற்படையினரால் சந்தேகநபர் கைது!

59

குதிரைமலை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை வடமேல் கடற்படை கட்டளை தலைமையகத்தினால் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச் சந்தேக நபர் கற்பிட்டி உச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கடற்படையினர் புத்தளம் கடல்வள புத்தளம் திணைக்களத்தில் குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here