ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது!

42

கடற்படையினா் ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை கைது செய்துள்ளனா்.

நெடுந்தீவு, குடாவெளி பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்விடத்திற்கு சென்றபோது ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரை துரத்திச் சென்ற கடற்படையினர் குறித்த சந்தேகநபரை இதன் போது கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் 50 வயதுடைய அவரிடம் இருந்து 5 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here