நீராடசென்ற பெண் பறிதாபமாக உயிரிழப்பு!

38

குளத்தில் நீராடச்சென்ற பெண் ஒருவர் முதலைக்கு பலியான சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

பலியான பெண் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டு குளத்தில் நீராடச்சென்றிருந்தார் என தெரிவிக்கப் படுகிறது.

கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர் கடுக்காமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என இனங்காணப்பட்டுள்ளட்ளது என குறிப்பிடுகின்றனர்.

சோதன்கட்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக பாவித்துவருவதாகவும் ஆனால் முதல்தடவையாக பெண்ணொருவரை முதலை கடித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here