காலநிலை மாற்றம் மக்களே! எச்சரிக்கை

24

மேலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.பின்னர் இது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் பரவக் கூடும்.

காலை வேளையில் சிலமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.அப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

முன்னெச்சரிக்கையாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here