பரிதாபமாக மோட்டார் சைக்கிலால் உயிரிழந்த நபர்!

25

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்ததுடன், பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டையிழந்ததால் உயரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இவ்வாறு உயிரிழந்தவர், துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜீபன் (வயது -18) என்ற இளைஞரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நெல்லியடிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here