நடிகர் சூர்யாவுடன் இணையும் மலையாள நடிகை!

627

முன்னணி நடிகர் சூர்யா என்.ஜி.கே மற்றும் காப்பான் போன்ற படங்களை முடித்துவிட்டு தற்போது இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் . இது சூர்யாவின் 38 வது படம் என்ற அடிப்படையில் இன்று அப் படத்திற்குரிய பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்துள்ளார் எனவும் முதன் முறையாக ஒரு முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிர்ஷ்டம் இவருக்கு கிடைதுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டெர்டெய்ன்மென் குனீத் மோங்கோ இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here