ஷிரியாஸ் ஐயரின் பட்டைய கிளப்பிய துடுப்பாட்டதினால் டெல்லி அணி அபார வெற்றி!

24

நேற்றய தினம் நடைபெற்ற போட்டியில் ஷிரியாஸ் ஐயரின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது இப்போட்டியானது .

இரு அணிகளுக்கும் முக்கியமான தோரு போட்டியாக அமைந்தது இப்போட்டியில் .முதலாவது வெற்றியை பெறும் நோக்குடன் களமிறங்கிய றோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது. இந்த போட்டி உற்பட அனைத்து போட்டிகளிளும்.

தோல்வி அடைந்தது பாரிய பின்னடைவில் காணப்படும் றோயல் சலஞ்சர்ஸ் அணி

போட்டி பற்றிய மேலதிக தகவல்கள்:-

பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ் அணியின் துடுப்பாட்டத்தினை பார்க்கும் போது அணித்தலைவர் விராத் கோலி 41 ஓட்டங்களையும் மெயின் அலி32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர் அதனை தொடர்ந்து பந்து வீச்சில் றபடா 4 விக்கெட்டுக்களையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 150 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கட்டுக்களையும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது .
அவ்வணி சார்பாக ஷிரியாஸ் ஐயர் 67 ஓட்டங்களையும், ப்ரித்வி ஷா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நவடிப் சைனி 2 விக்கெட்களையும் மோயீன் அலி, பவான் நெஹி, டிம் சவுத்தி, மொஹமட் சிராஜ் ஆகியோர் தல ஒரு விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியினால் டெல்லி அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது, அதேவேளை பெங்களூர் அணி விளையாடிய எந்த போட்டிகளிலும் வெற்றிபெறாமல் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here