தீப்பற்றியதால் பெண் பரிதாப மரணம்!

346

யக்கல, பிட்டுவகொட பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகி தீக்கிரையாகியதில் வீட்டினில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எமது செய்தியாளர் கூறுகையில், இச் சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இவ்வறு உயிரிழந்த பெண் 78 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் ஆவார்.இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டில் மின் ஒழுக்கு இருப்பதாக இதற்கு முன்னர் மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதும் அது குறித்து மின்சார சபையினர் கவனம் செலுத்தவில்லை என உயிரிழந்து பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here