நகைக் கடையை கொள்ளையிட்ட நபர்!

179

அடகு நகைக் கடை ஒன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் வவுனியாவில் நேற்று (08) ஒருவர் கைது செய்யபட்டதுடன், அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களிற்கு முன்னர் குறித்த அடகு நகைக் கடையில் நகைகள் மற்றும் பணம் ​கொள்ளையிடப்பட்டிருந்தன.வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரிடமிருந்து 673,000 ரூபாய் பெறுமதியான நகைகளையும் சுமார் 10 இலட்சம் ரூபாவையும் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here