நாட்டில் அனல் காற்று மக்களே எச்சரிக்கை!

315

நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை காரணமாக சில பகுதிகளில் அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டவியல் திணைக்களம் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரித்துள்ளது.

கடும் வெப்பமான காலநிலை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்துடனான காலநிலை நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பொது மக்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சோர்வு, களைப்பு என்பனவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here