மோடி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய ரஜினிகாந்த்!

138

நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் என்ன முடிவெடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் அளித்து இருக்கும் பேட்டி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், லோக் சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு. லோக்சபா தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரை எந்தக்கட்சியும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்த கூடாது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல் தண்ணீர் பிரச்சினைதான் தற்போது பெரிய பிரச்சினை. அதை தீர்க்கும் கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும். அதை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துபவர்கள் என்று யாரை நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அதே சமயம் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை அவர் பாராட்டி இருக்கிறார். அதில், பாஜக கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றி கூறியிருந்ததை வரவேற்கிறேன். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும், என்று ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக நதிகள் குறித்து ரஜினி பேசி இருக்கிறார். ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றார். தற்போது பாஜகவின் தண்ணீர் கொள்கைகளை பாராட்டி அவர் பேசி இருக்கிறார். இதன் மூலம் பாஜகவிற்கு ரஜினி மறைமுக ஆதரவு அளிக்கிறாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here