161 மில்லி கிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது !

117

நேற்றைய தினம் திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை என்பன இணைந்து மரத்தடி சந்தி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 161 மில்லி கிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 18, 23 மற்றும் 30 வயதுடையர்கள் எனத் தெரியவந்துளளது.

மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here