சொந்த ஊரில் சாதிக்குமா ராஜஸ்தான் ரோயல் அணி!

27
Mahendra Singh Dhoni captain of Chennai Super Kings and Ajinkya Rahane captain of Rajasthan Royals at the toss during match 12 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Chennai Superkings and the Rajasthan Royals held at the M. A. Chidambaram Stadium in Chennai, Tamil Nadu on the 31st March 2019 Photo by: Prashant Bhoot /SPORTZPICS for BCCI

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம் இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று இரவு 8.00 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையே கடந்த 31 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸானது 8 ஓட்டங்களினால் வெற்றிபெற்றதுள்ளது.

அத்துடன் தரவரிசைப் பட்டியிலில் 10 புள்ளிகளில் முதல் இடத்தில் உள்ள சென்னை அணியை ஏழாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி எதிர்த்தாடுவது என்பது அந்த அணிக்கு பாரிய சாவால் மிக்கதாக அமைந்துள்ளது.

எனினும் ராஜஸ்தானின் சொந்த ஊர் என்பதனால் அவர்களும் சென்னைக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள்.

அதுமாத்திரமின்றி கடந்த போட்டியின்போது காயத்தினால் கொல்கத்தாவுடனான போட்டியை தவிர்த்த சஞ்சு சம்சன் இந்த ஆட்டத்தில் களமிறங்கவுள்ளமையும் அணிக்கு பலமாக அமைந்துள்ளது எனலாம்.

சென்னை அணியை பொறுத்தவரை அனுபவ துடுப்பாட்ட வீரர்களான டூப்பிளஸ்ஸி, வேட்சன், ராயுடு, ரய்னா, கேதர் யாதவ் மற்றும் தோனி போன்ற சிறந்த வீரர்களும் அணிக்கு பலம் சேர்க்க பந்து வீச்சில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாகீர், ஜடேஜா போன்ற சிறப்பான நிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 13 போட்டிகளிலும், சென்னை அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here