தங்கம் கடத்த முற்பட்ட விமான சேவை ஊழியர் கைது!

27

விமான சேவை ஊழியர் ஒருவரினால் சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்றபட்ட குற்றச்சாட்டில்.

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர் ஒருவர் விமானநிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் நபர் ஒருவரிடமிருந்து குறித்த தங்க பிஸ்கெட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர் தங்க பிஸ்கட்டுக்களை மிகவும் சூட்சமமான முறையில் இச் செயற்பாட்டை செய்துள்ளார்.

குறித்த நபர் தனது காலுறைகளில் தனித்தனியாக பொதி செய்து 3 கோடி ரூபா பெறுமதியான

40 தங்க பிஸ்கட்களை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்ட போதே அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபாவென தெரிவித்துள்ளது.

குறித்த நபர் வத்தளையைச் சேர்ந்த 23 வயதுடைய நபரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here