நவின கணிப்பான் மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சாதனை படைத்த அண்ணன் -தங்கை

33

டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அலைபேசி செயலியினை வடிவமைப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்.

இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகும்.மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து தயாரித்த கணித செயன்முறை செயலி (Mathematics Mobile App) முதலிடத்தைப் பெற்றது.

இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய கணிப்பான் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். அக் கணிப்பான் ஆனது தரவுகளைப் பயன்படுத்திப் பெறும் விடையுடன் செய்கை வழித் தரவுகளையும், ஒரே நொடியில் காண்பிக்கும் வகையில்.

இந்தச் செயலியை மாணவன் பிரவீனனுன் அவரது சகோதரியும் இணைந்து வடிவமைத்திருந்தனர்.
இவர்கள்.

அலைபேசி செயலிகளை உருவாக்குவதில் அதிக அக்கறைகாட்டி வந்த தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் பிரவீனுக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் இராமநாதன் சுகுமார் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஆசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் தான் தயாரித்த அதிதிறன் அலைபேசி செயலியை (Smart Phone App) மாணவன் பிரவீனன் சமர்ப்பித்திருந்தார். அதிலும், அவரது செயலிக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

இவ்வாறு அவரின் திறமை காணப்படும் போது டயலொக் நிறுவனம் நடத்திய அலைபேசி செயலி வடிவமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான போட்டியில் தான் புதிதாக உருவாக்கும் செயலியை சமர்ப்பிக்கவிருந்தார் பிரவீனன்.

போட்டி விதிகளின் படி அவர் தனிப்பட இந்தச் செயலியை சமர்ப்பிக்க முடியாத நிலையில், பாடசாலையில் சக மாணவர்களின் உதவியைக் கோரினார்.

எனினும், எவருமே முன்வராததால் பிரவீனன் தனது சகோதரி தர்க்‌ஷிகாவை தனது குழுவில் இணைத்து செயலியை உருவாக்கினார்.

இவர்கள் கலந்து கொண்ட இறுதி போட்டியில் 11 அணிகள் பங்கு பற்றியது இதில் முதலாம் இடத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

செயலியை வடிவமைத்த மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரியான மாணவி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் Dialog App Challenge 2018 கிண்ணைத்தை சுவீகரித்ததுடன் அவர்களுக்கு 3 லட்சம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

மாணவர்களின் இந்த திறமையை பார்த்து பாராட்டுக்கள் அதிகம் வந்த வண்னம் காணப்படுகின்றது.அத்துடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here