நெட்டிசன் ஒருவரை தடவ சொன்ன நடிகை கஸ்தூரி!

29

நெட்டிசன் ஒருவர் தன்னை கண்டிப்பாக தடவலாம் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை விமர்சிக்க பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். நடிகை லதாவை தடவியதை மேற்கோள் காட்டி நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, லதா உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து கஸ்தூரியும் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

இந்த நிலையில், நெட்டிசன் ஒருவர் நான் உங்களை தடவலாமா என்று பதிவிட்டிருந்தார். அதை பார்த்த கஸ்தூரி, அது படக் காட்சியாக இருந்து நாம் இருவரும் நடித்தால், நீங்கள் 7 வயதுள்ளவராக இருந்தால் கண்டிப்பாக தடவலாம் என்று பதில் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதில் பதிவை பார்த்த அந்த நெட்டிசன் தன் ட்வீட்டை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நல்லவிதமாக கொமெண்ட் போட்டபோதெல்லாம் பதில் அளிக்காமல் முதல் முறையாக தப்பா போட்ட கமெண்ட்டுக்கு பதில் அளிக்கிறீர்களே என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here