பயணிகளுடன் சென்ற பஸ் பாரிய விபத்து!

27

அதிவேகமாக வந்த பஸ் வண்டி வேககட்டுப்பாட்டை இழந்ததால் வீதியை விட்டு விலகி பள்ளத்தினுள் விழுந்துள்ளது.

இச் சம்பவம் ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 06 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்

இந்த விபத்து இன்று காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவான்வெல்லையிலிருந்து அவிசாவளையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்தபோது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால்.

இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here