பொலிஸாரிடம் சிக்காத பாரிய போதைப்பொருள் வியாபாரி!

32

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிற்பகல் 5 மணியளவில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 1.38 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த ரகசிய தகவலுக்கமைய பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் போதை பொருளுக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் தேடிக்கொண்டு இருக்கிறர்கள்.

ஆயினும் ஹெரோயின் போதைப்பொருளுடன் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சந்தேகநபரை தேடும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,கல்கிஸ்ஸ -படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று பிற்பகல் 7.40 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 32 வயதுடைய கல்கிஸ்ஸ, படோவிட பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து ,2 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here