பாடகி வாய்ப்பு கிடைத்த விஜய் டிவி தொகுப்பாளினி!

41

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு தற்போது சினிமாத்துறையில் பாடகியாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான ‘மதுரை பளபளக்குது’ என்ற பாடலை விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா பாடியுள்ளதாகவும் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் இப் பாடலை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here