தொலைந்த சிறுவனுக்கு நடந்தது என்ன

11 வயதுடைய தனது மகனை கடந்த 9 ஆம் திகதி முதல் காணவில்லையென அவரின் தந்தையார் பாதுக்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் தனது மகனை எவராவது அடையாளம் கண்டால் தனது (0712139862) தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

காணாமல்போன சிறுவனின் தந்தையார் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில். எனது மகனான முஹம்மட் அம்மார் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

மேலும் இரவு 10 மணிமுதல் தேடியும் மகன் கிடைக்காததால் நான் இரவு 10 மணியளவில் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

எனது மகன் தரம் 6 இல் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவருகின்றார்.இது வரையில் எனது மகன் கிடைக்காததால் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறு தந்தை கேட்டுக்கொள்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here