பரிதாபமாக உயிரிழந்த பெண்

29
இன்று புத்தளம் ,கொழும்பு பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 04 பேர் காயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை 02.45 45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் வேன் ஒன்றும் கனரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
திருமண வீடொன்றுக்கு சென்றுவிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here