பெண்ணின் கண்ணுக்குள் 4 தேனீக்கள் உயிருடன் மீட்பு

28

பெண்ணின் கண்ணுக்குள் இருந்து, 4 தேனீக்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வான் நாட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹீ என்ற 29 வயதுடைய பெண், கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார்.

பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது கண்களில் அரிப்பு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைகளை கொண்டு வழக்கம்போல கண்களை கசக்கியுள்ளார். தொடர்ந்து வலி ஏற்படவே கண்களை கழுவியுள்ளார். சரிவரவில்லை.

மறுநாள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லவே, அங்கு, அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

இது குறித்து வைத்தியர் கூறியதாவது, ‘கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது. மைக்ரோஸ்கோப் மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன.

உலகிலேயே இது தான் முதல் நிகழ்வு என நினைக்கிறேன். இவை வியர்வை தேனீக்கள் ஆகும்’ என கூறினார்.

இதையடுத்து 5 நாட்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 80% பார்வை சரிசெய்யப்பட்டுள்ளது.

பார்வையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளமையம் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here