அசிட் தாக்குதலில் சிக்கிய பெண்கள் இருவர் உட்பட 9 பேரின் பரிதாப நிலை

குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டஅசிட் தாக்குதலினால்  பெண்கள் இருவர் உட்பட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது கம்புறுபிட்டிய, ஒமாரஹேன பகுதியில் வைத்து இவ் அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ மற்றும் ஆந்தபான வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் ஒரு குழு வீட்டிற்கும் வேனிற்கும் தீ வைத்துவிட்டு அந்த வீட்டில் இருந்தவர்கள் மீது அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கம்பறுபிட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here