இலங்கை தற்கொலைதாரி தாயாருக்கு உருக்கமான கடிதம்!

49

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

குறித்த சந்தேக நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தனது மதத்திற்காக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார்.

இயேசுபிரானின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 310 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்து தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த கடிதம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here