சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 37 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

58

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணிக்கு பெரண்டோப் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வோட்சன் முதல் ஓவரின் நான்காவது பந்து வீச்சில் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, ராயுடுவும் 1.2 ஆவது ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேய ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் சென்னை அணி 6 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுக்க, 3 ஆவது விக்கெட்டுக்காக கேதர் யாதவுடன் கைகோர்த்தாடிய ரய்னா அதிரகாட்ட ஆரம்பித்தார்.

ஐந்தாவது ஓவரை எதர்கொண்ட ரய்னா அந்த ஓவரின் 3,4, நான்காவது பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியபோதும், இறுதிப் பந்தில் பொலார்ட்டின் அபாரமான பிடியெடுப்பு காரணமாக 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரய்னாவின் ஆட்டமிழப்பையடுத்து தோனி களமிறங்கி கேதர் யாதவ்வுடன் பொருமையாக துடுப்பெடுத்தாடிவர சென்னை அணி 7.2 ஓவரில் 50 ஓட்டங்களையும் 13 ஆவது ஓவரின் நிறைவில் 80 ஓட்டங்களையும் பெற்றது.

ஆடுகளத்தில் கேதர் யாதவ் 41 ஓட்டத்துடனும், தோனி 11 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இதனால் சென்னையின் வெற்றிக்கு 42 பந்துகளில் 91 என்ற நிலையிருந்தது.

15 ஆவது ஓவருக்காக பாண்டியா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் முதல் பந்தில் தோனி ஆட்டமிழந்து சென்னை அணி ரசிகர்களின் வெற்றிக் கனவை தகர்த்தார்.

அது மாத்திரமில்லாது அடுத்து வந்த ஜடேஜாவும் அதே ஓவரன் நான்காவது பந்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறி சென்னை அணி 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்ககை இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய பிராவோவுடன் கைகோர்த்தாட ஆரம்பித்த கேதர் யாதவ 15.1 ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்று, அரைசதம் கடந்ததுடன் அடுத்த பந்திலும் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசினார்.

ஒரு கட்டத்தில் சென்னை  அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 66 ஓட்டம் என்ற நிலை இருந்தது.

இந் நிலையில் 18 ஆவது ஓவருக்காக மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் முதல் பந்தில் கேதர் யாதவ் 58 ஓட்டத்துடனும், பிராவோ 5 ஆவது பந்து வீச்சில் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க சென்னை அணி 115 ஓட்டத்துக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.

இறுதியாக சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 37 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க, பாண்டியா தலா 3 விக்கெட்டுக்களையும், பெரண்டோப் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here