நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

61

இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அநுராதபுரம், மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை உயர்வாகவே காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சூரியன், இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக உச்சங்கொடுக்கும் எனவும், இதற்கமைய இன்று நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் 42 செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் நிழலான இடங்களில் வசிக்குமாறும், அதிக நீராகாரத்தை பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் இதுகுறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here