உங்க மனசிலும் தோனி எங்க மனசிலும் தோனி

273

பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட தல தோனியின் வீடியோ வைரலாகி உள்ளது. கேப்டன் கூல், சிக்சர் மன்னன், ஹெலிகாப்டர் ஷாட் கில்லி, தல என பல பெயர்கள் தோனிக்கு உண்டு. உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்தது உள்ளிட்ட பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் அவரது சென்னை அணி, மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியை காண, ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

அதில் தோனியின் ஆட்டத்தை பார்க்க வந்திருந்த பாட்டி ஒருவரை தோனி சந்தித்து பேசியுள்ளார். மேலும் வந்திருந்த பாட்டி ஒருவரை தோனி சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கிடக்கிறது.

தோனியை பார்த்த மகிழ்ச்சியில் அந்த பாட்டி அவரது கைகளை பிடித்துக் கொண்டு வாழ்த்தினார். தோனியும் சும்மா இருக்கவில்லை. தல ஆயிற்றே…. அந்த பாட்டியுடன் பணிவாக பேசி செல்பி எடுத்து கொண்டார். அவருடன் வந்த இளம்பெண்ணின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

மேலும், சென்னை அணியின் ஆடையில் ஆட்டோகிராப் வழங்கியும் அசத்தினார். இந்த வீடியோ ஐபிஎல் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here