கோலியின் அதிரடியான ஆட்டத்தினால் கொல்கத்தா ; வெற்றியிலக்கு 206

953

பெங்களூருவில் இடம்பெற்றுவரும் இன்றைய ஐ.பி.எல் தொடரில் வெற்றி பெற 206 ஓட்டங்களை  இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி.

ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழட்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கி தொடக்கம் முதல் இருவரும் அடித்து ஆடினர்.

அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது பார்திவ் படேல் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ஓட்டத்துடன்  ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 63  ஓட்டத்துடன்  வெளியேறினார்

இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஸ்டோனிஸ் 13 பந்தில் 28 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here