மின் வெட்டு நேரத்தில் மாற்றம் ?….

2551

இலங்கை மின்சார சபையினால் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் துண்டிப்பு நேரம் மாற்றம் அடைந்துள்ளதா? என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாட்டிலுள்ள சில பிரதேசங்களுக்கு நேற்றிரவு (5) 2 மணி நேர மின் துண்டிப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும், வேறு சில பிரதேசங்களுக்கு ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் சில பிரதேசங்களுக்கு நேற்று இரவு வேளை, மின்சாரம் துண்டிக்கப்படவே இல்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையில் பகல் நேரத்தில் 3 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமுமாக மொத்தம் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், நேற்றிரவு இந்த மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் நேர மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here