நான் விசேடமான திறன் கொண்டவன் அன்டிரே ரசெல் தெரிவித்துள்ளார்!

963
Kolkata Knight Riders cricketer Andre Russell gestures on his way back after losing his wicket during the Indian Premier League (IPL) Twenty20 cricket match between Kolkata Knight Riders and Kings XI Punjab at the Eden Gardens Stadium in Kolkata on March 27, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

நான் விசேடமான திறன் கொண்டவன் என்பது எனக்கு தெரியும் என மேற்கிந்திய அணியின் அன்டிரே ரசெல் தெரிவித்துள்ளார்

பெங்களுர் அணிக்கு எதிராக 13 பந்துகளில் ஏழு சிக்சர்கள் உட்பட 48 ஓட்டங்களை பெற்று கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் விசேடமானவன் என்பது எனக்கு தெரியும் எனினும் நான் எனது திறனை அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்பது எனக்கு தெரியும் என ரசெல் தெரிவித்துள்ளார்.

பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 67 ஓட்டங்கள் அவசியமாகயிருந்த நேரத்தில் களத்தில் நுழைந்த ரசல் சிக்சர்கள் குறித்து மாத்திரமே சிந்தித்தேன் என தெரிவித்துள்ளார்.

எவ்வளவு சிக்சர்களை பெறமுடியுமோ அவ்வளவு சிக்சர்களை பெறுவதே என சிந்தனையாகயிருந்தது,சிக்சர்கள் அடித்தால் பெறவேண்டிய ஓட்ட வீதம் குறையும் ஓட்டங்களின் எண்ணிக்கையும் குறையும் என நான் சிந்தித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்

வேகப்பந்து வீச்சாளர்கள் வரும்வரை காத்திருக்க போவதாக தினேஸ் கார்த்திக்கிடம் தெரிவித்தேன்,அவர்களால் சிறப்பாக பந்து வீச முடியாது  எனவும் சிறிய மைதானத்தில் சிக்சர்களை பெறலாம் எனவும் நினைத்தேன் என்றும் ரசெல் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு சிறப்பாக நீங்கள் விளையாடினாலும் ஏதோ ஒரு கட்;டத்தில் மோசமாக விளையாடவேண்டியிருக்கும் என்பது எனக்கு தெரியும் இதன் காரணமாக நான் அமைதியிருப்பேன் எனவும் ரசெல் தெரிவித்துள்ளார்

நான் இன்று சிறப்பாக விளையாடினேன் நாளையும் அதேபோன்று விளையாடுவேன் என தெரிவிக்கப்போவதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இன்று சிறப்பாக விளையாடினேன் நாளையும் அதேபோன்று விளையாடுவேன் என தெரிவிக்கப்போவதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here