மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

55

மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஊறுபொக்க பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்தவர் ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த, ஆரியதாஸ சேனாநாயக்க (72 வயது) எனும் நபரே ஆவார்.

இந்த அனர்த்தம் ஊறுபொக்க, பட்டஹேன பிரதேசத்திலேயே ஏற்பட்டுள்ளது. குறித்த நபர், அவரது மகனுடன் கருவா உரித்துக்கொண்டபோது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு அயலவர்வர்கள் உதவியுடன் கொண்டுசெல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

அங்குள்ள சில வீடுகளின் மின் இணைப்பு இந்தச் சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊறுபொக்க வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here