நீங்கள் வாகனம் வைத்திருப்பவரா எச்சரிக்கை !

31

அதிக ஒலி சத்தத்தை எழுப்பிகளுடனான வாகனங்களை சுற்றிவளைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் ஆலோசணையை வழங்கியுள்ளார்.

குறுகிய மற்றும் நீண்டகால தீர்மானங்கள் தொடர்பில் ஒலி மாசடைதலைத் தடுத்தல், எதிர்காலத்தில் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குதல் என்பனபற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இதன்போது போக்குவரத்து சட்டங்களை மீறுதல் மற்றும் 105 டெசிபல் மீட்டரை விட அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here