அவுஸ்ரேலியாவில் கோர வெடிப்பு – இலங்கை இளைஞன் பரிதாபம்!

33

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ண் ஹம்பர்பீல்ட் பகுதியில் கழிவுகள் மீள் சுழற்சி செய்யும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்தார்.

இதில் கிளிநொச்சியை சேர்ந்த 26 வயதையுடைய விக்கேஷ்வரன் வரதராஜன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 2012 ஆண்டு படகுமூலம் அவுஸ்ரேலியா சென்ற அவர் சுமார் மூன்றுவருடங்களாக குறித்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்த இவரது குடும்பம் தமிழ் நாடு அகதி முகாமிலேயே இன்றுவரை வசித்து வருகின்றது.

இந்த நிலையில் அவுஸ்ரேலியாவிற்கு படகுமூலம் சென்றிருந்த குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இந்த அனர்ததிற்கு முகம் கொடுத்திருந்தார்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒருவர், ‘கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விக்னேஷ் தனது கடமையை என்னிடம் இருந்து பொறுப்பேற்றிருந்தார். அவர் பொறுபேற்றவுடன் நான் வெளியாகியிருந்தேன்.

அவர் தனித்தே அன்று வேலைசெய்ய வேண்டியிருந்தது. 35 நிமிடங்களில் அவரிடமிருந்து தொடர்பு எடுத்து வெடிப்பு சம்பவம் நடந்தையும் தான் வைத்தியசாலைக்கு போவதாகவும் தெரிவித்தார்.

அவருடைய இடது பக்க முகப்பகுதி மற்றும் தொண்டை பகுதி பாதிப்படைந்துள்ளது.
சுமார் மூன்று வருடங்கள் இங்கு வேலை செய்கிறோம். அனல் வீசும் காலப்பகுதியில் கூட இப்படி நடந்ததில்லை. இப்படி நடந்தமை எங்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

அதேவேளை , இந்நிறுவனத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வழக்கு நீதி மன்றில் நிலுவையில் உள்ளது.

ஒரு லட்சத்து 53 ஆயிரம் லீற்றர் கொள்கலன்களை மட்டும் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 லட்சம் லீற்றர் கொள்கலன்களை வைத்திருந்தனர் என்ற அடிப்படையிலேயே வழக்கு இந்நிறுவனத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்நிறுவனத்தில் பாதுகாப்பு விடயம் கேள்விக்குறியாக காணப்பட்டது. வேலையாட்கள் அனேகர் கைகளில் கொப்பளங்கள் மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here