குளவிகள் மக்களை தாக்கியதா நடந்தது என்ன?

638

தேயிலை கொழுந்தை கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் பரித்துக்கொண்டிருந்த 36 தொழிலாளர்களுக்கு குளவி குத்தியதாகவும் அவர்களை கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 35 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது இன்று மாலை 3 மணியளவில் கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தேயிலை மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து குளவிகள் அவர்களை தாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here