08 மணித்தியாலத்தில் சாதனை படைத்த புறாக்கள்!

125

புறாக்கள் தெற்கில் இருந்து வடக்கு வரையில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளன.

இப் போட்டியானது  மாத்தறை கந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் நடத்தப்பட்டது. இதனை இரண்டு வருடகாலமாகயாழ். பந்தய புறாக்கள் கழகம் (பபுகயா) நடாத்தி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட இலங்கையின் மிகத் தூரப் போட்டியான ‘ட்ராகன் மவுத்’ போட்டிபிரபல மகப்பேற்று மருத்துவ நிபுணரான கே. சுரேஷ்குமாரின் அனுசரணையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07)ம் திகதி நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து, தரைவழிப் பாதையாக சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ‘ட்ராகன் மவுத்’ என்னும் பகுதிக்கு 100 பந்தய புறாக்கள் கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து விடுவிக்கப்பட்டதும் அவை யாழ்ப்பாணத்தை நோக்கி பறக்க தொடங்கின.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here