மாணவியின் வாழ்கையை சீரழித்த சந்தேக நபர் கைது!

139

தனியார் பேருந்திற்குள் வைத்து புத்தளத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இவர் ஆனமடுவ – மஹாஉஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான திருமணமானவர் ஆவார்.இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர் மேலதிக வகுப்பிற்காக ஆனமடுவ பிரதேசத்திற்கு சென்ற 15 வயதான பாடசாலை மாணவி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தான் சேவை செய்யும் பேருந்தில் மாணவியை ஏமாற்றி அவரை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி அவரின் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய மாணவியின் தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here