அமேரிக்க டொலர் ரூபாவில் இருந்து 4.5 விதத்தினால் அதிகரிப்பு.!

285

சர்வதேச வர்த்தகத்தின் மூலம் இலங்கைக்கு நன்மையுள்ள இறக்குமதி செலவுகள் மேற்கொள்ளப்படும் பாரிய நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு குறைவடைந்திருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

வெளிநாட்டு நாணயம் பெருந்தொகையில் ஈர்க்கப்பட்ட வாகனத்திற்கான கொடுப்பனவு தங்கம் மற்றும் எரிப்பொருள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான செலவை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் காரணமாக தற்பொழுது இந்த இறக்குமதி செலவு குறைந்திருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி சபை மேற்கொண்ட வட்டி கொள்கை தொடர்பில் விடயங்களை தெளிவுப்படுத்துவதற்காக நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் ஆளுநர் உரையாற்றினார்.

இந்த செய்தியாளர் மகாநாடு இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. தற்பொழுது இலங்கை ரூபா வெளிநாட்டு நாணயத்துக்கு அமைவாக வலுவடைந்துள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

அமெரிக்கா டொலருக்கு அமைவாக ரூபாவின் மதிப்பு 4.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. பாரிய சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் இம்முறை வெற்றிகரமான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கப்பட்டதை ஆளுநர் இதன்போது பாராட்டினார்.

2018 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.2 சதவீதத்தால் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் எஸ்.ஆர்.ஆட்டிக்கல அசோக்க ஹந்தகம உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here