சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் புதிய திட்டம்!

485

இலங்கை சுற்றுலா துறையில் புதிய வளர்ச்சியை பெறுவதற்காக சுற்றுலா அபிவிருத்திசபை பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இத் திட்டத்திற்கு அமைவாக 39 நாடுகளுக்கு on arrival visa முறையை அமுல்படுத்த, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் ஒரு புது முயற்சியாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 39 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு இலகுவாக வரும் விதமாக, இந்த on arrival visa முறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் கிடைக்கும் பிரதிபலன்களின் பிரகாரம், மேற்படி நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவதா ?

அல்லது வேறுவிதமான நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிப்பதா ? என்பது தொடர்பில் ஆராயப்படுமெனவும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆஸ்திரியா, பல்கேரியா, பெல்ஜியம், கம்போடியா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸிடொனியா,பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து,

-போலந்து, போர்த்துகல், ரோமானியா, சிலோவேனியா, சுவீடன், ஸ்பானியா, ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்ரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து,

-மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், இம்முறை ஊடாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலகுவாக இலங்கைக்கான சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஆசியாவில் பல நாடுகள் on arrival visa முறையை அமுல்படுத்தியுள்ளன.

இதன் மூலம் அந்நிய வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன், பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here