உயிருக்குப் போராடும் குழந்தையின் இதய ஒபரேசனுக்கு உதவுங்கள்…

347

பிறவியிலேயே இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/help-baby-lithisha-for-heart-surgery என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்படுகிறது.

திருச்சியைச் சேர்ந்த நடராஜன்-போதும்பொன்னு தம்பதியரின் மகள் லித்திஷா, பிறக்கும் போதே இதய நோயுடன் பிறந்துள்ளார். பிறந்த 15-வது நாளில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்காக, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு இதய பாதிப்பு தெரியவந்தது.

இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அவர்களிடம் வசதி இல்லாததால், குழந்தையை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், 2 ஆண்டுகள் கழித்து தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என டொக்டர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றபோது, குழந்தைக்கு ஒபரேசன் செய்ய வேண்டும் என்று டொக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்காக 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர். தற்போது குழந்தை லித்திஷாவுக்கு மூன்றரை வயது ஆகிறது.

விவசாயக் கூலித் தொழிலாளியான நடராஜனிடம், குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே, நன்கொடையாளர்களின் உதவியை நாடி உள்ளார். நன்கொடையாக நீங்கள் வழங்கும் சிறு உதவியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

ஒன்லைன் மூலம் நிதி உதவி வழங்க விரும்புவர்கள், எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/help-baby-lithisha-for-heart-surgery என்ற இணையதளத்தை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633.

உதவுவோம் உயிர்காப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here