பேருந்தில் சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?

1077

புத்தளம் தனியார் பேருந்தில் சென்ற மாணவி நடத்துனர் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆனமடுவ – மஹாஉஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான திருமணமான நபரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி தான் சேவை செய்யும் பேருந்தில் அவரை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார். அதற்கமைய மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இந்தியாவில் ஓடும் பேருந்துகளில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது மட்டுமன்றி தற்போது இலங்கையிலும் இப்படியொரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில் குறித்த நபருக்கு பொலிஸார் தக்க தண்டனை அழித்தால் தான் மீண்டும் இவ் உலகில் இப்படி பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here