வீட்டிற்குள் சென்ற தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய மகன்

24

கிராம சேவையாளரின்மகன் இன்று பகல் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள தாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த வவுனியா பிரதேச பாடசாலையொன்றின், க.பொ.த உயர்தரம் இறுதியாண்டு மாணவன் ஆவார்.

இவரது தந்தை இன்று காலை 11.30 மணியளவில் மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் அவர் தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை.

இதனால் வீட்டிற்குச் சென்று மகனின் அறைக்கு சென்ற தந்தை (கிராம சேவையாளர்) மகன் தூக்கில் தொங்கிய நிலையை காண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

தற்கொலைக்கான காரணங்கள் ஏதும் கண்டரியப் படாத நிலையில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here