குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி

27
சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் பரிதாபமாக கயமடைந்துள்ளார். காயமடந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச எல்லையில் உள்ள குமண தேசிய சரணாலயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

உயிர் இழந்தவர் திருக்கோவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.இவர் குமண தேசிய சரணாலயத்தின் அருகில் வீதியை பராமரிப்பு வேலையில் ஈடுபடும் போதே இச்சம்பவம் நடந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை எடுக்கச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள ஜீப் சாரதியையும் தாக்கியுள்ளது.

மற்றும் சரணாலத்தில் பாகுரே எனும் பகுதியிற்குல் உள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்றய பகுதிகள் அனைத்தும் பயணிகள் பார்வையிட திறந்துள்ளதாக நிர்வாக அதிகாரி சிறிரகுமார குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த பராமரிப்பு வேலையின் போது அதிகாரி தினமும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார் என ஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here