பிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்!

13

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்து கொள்கிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வரும் ஜூன் மாதம் துவங்குகிறது. இதில் கலந்து கொள்வது தொடர்பாக நடிகை சாந்தினி தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீசனின் முதல் போட்டியாளர் உறுதியாகியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ஓகே ஓகே படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து காமெடியில் கலக்கிய ஜாங்கிரி மதுமிதா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜாங்கிரி மதுமிதாவுக்கும் அவரின் தாய்மாமாவின் மகனான உதவி இயக்குநர் மோசஸ் ஜோயலுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி தான் திருமணம் நடந்தது. திருமணமான 3 மாதங்களில் அவர் கணவரை பிரிந்து 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்.

கல்யாணமான கையோடு மதுமிதா பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரே கணவருடன் லடாயா என்று நினைக்க வேண்டாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதால் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம். முந்தைய சீசன்களிலும் மதுமிதாவை அழைத்துள்ளனர். ஆனால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் மதுமிதா. இந்நிலையில் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். விஜய் டிவி பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here