அப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை!

10

பல அப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை பயணத்தின் போது பார்த்ததாக கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் நடந்த, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தின் ஆபத்தை தடுக்க, அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வரவேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்.

இந்த போரில், அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, இந்த பிராந்தியத்தில், பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மோடி பேசினார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில், நடந்த ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இதன் செயல்பாட்டில், இந்தியா தனது பங்களிப்பை உறுதி செய்துள்ளது.

கல்வியும், கலாசாரமும், நமது சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செயல்பாடுகளை கொடுத்தது. இளைஞர்கள் இடையே, பிரிவினையை பரப்புவதை நிறுத்த வேண்டும்.

இலங்கை சென்ற போது, புனித அந்தோனியார் தேவாலயத்தில் , பல அப்பாவிகளின் உயிர்களை பறித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை பார்த்தேன்.

பயங்கரவாதத்தின் ஆபத்தை தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வரவேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு , நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்.

இந்த போரில், அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும். இந்த பிராந்தியத்தில், பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here