வரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…!

248

இலங்கையில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பல நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன.

இந்நிலையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்தமையினால் அந்த பகுதி கொள்ளையர்களின் இரத்தினக்கல் தீவாக மாறியுள்ளது.

இந்த நீர்த்தேக்கம் அனுமதியற்ற இரத்திக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சொர்க்கபூமியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் விரைவாக வற்றி வருகின்றது. இந்நிலையில் அந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் பாரிய அளவிலான குழிகளை தோண்டி அங்கிருக்கும் இரத்தினக்கற்களை அகழ்ந்தெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இரத்தினக்கல் கொள்ளையர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொள்ளையர்கள் அகழ்விற்கு செல்லும் போது பாதுகாவர்களை ஈடுபடுத்தி கொள்வதனால் அவர்கள் சட்டத்தில் சிக்குவதில்லை என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நீர்த்தேக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனுமதியற்ற இரத்தினக் கல் அகழ்வு காரணமாக பாரிய சுற்று சூழல் பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here