குளிர்பானங்களை தொடர்ந்து அருந்துபவரா நீங்கள்முதலில் இதை படியுங்கள்……!

30

கலர் குளிபானங்களை அருந்துவதால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இக் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

கெமிக்கல்,சர்க்கரை,ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள குளிர்பானங்களால் எந்தவித நன்மையும் நமக்கு கிடைப்பதில்லை.தினசரி மாறாக 3 லீட்டருக்கு மேல் செயற்கை குளிர்பானங்களை அருந்தும் நபருக்கு மரணத்தை மட்டுமே பரிசாக கொடுக்கிறது.இதனால் நம் உடலுக்கு எற்படும் நோய்களை பற்றி பார்ப்போம்.

 

புற்று நோயை எற்படுத்தும்:

செயற்கை குளிர்பானங்களை ஒருவாரம் தொடர்ந்து குடிப்பதனால், கணையத்தில் தொற்று எற்படுவதுடன், கணைய புற்று நோய்க்கு வழிவகை செய்கின்றது.
ஆண்கள் செயற்கை குளிர்பானம் அருந்துவதால் புரோஸ்டேட் புற்றுநோயை சந்திக்க 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது.

செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதில் உள்ள் கெமிக்கல் குடல் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்களை கொண்டுள்ளது.

இதய நோய்:

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அதிக கலோரிகள் மற்றும், சர்ச்சைகளை கொண்ட பானங்கள் இதயத்தை விரைவில் பலவீனப்படுத்தி, மரண வாயிலுக்கு அழைத்து செல்லும் அபாயம் கொண்டது என நிரூபித்துள்ளது.

சர்க்கரை நோய்:

சர்க்கரை கலந்த அதிகப்படியான பானங்களை அருந்தும் போழுது இரு வகையான் அ நீரிழிவு நோய்களை நாம் சந்திக்க நேரிடும்.சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி 1,30,000 பேர் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால், நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் பாதிப்பு:

செயற்கை குளிர்பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு கான் அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும். செயற்கை கலர் குளிர் பானங்களில் உள்ள, கெட்ட கொழுப்பு விரைவிலேயே கல்லீரல் செயல் இழப்புக்கு காரணமாக இருக்கும் என 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வன்முறை எண்ணங்களை தூண்டும்:

aggressive woman trying to hurt you. isolated on white

இரண்டு கான் குளிர்பானங்களை ஒரு வாரத்துக்கு அருந்தும் இளைய வயதோர், வன்முறை எண்ணங்களை கொண்டவர்களாகவும், தீய எண்ணங்களுக்கு அடிபணிந்தவராகவும் இருப்பார்கள் என்று ஆய்வுமுடுவுகள் காட்டுகின்றது.

பிரசவத்தில் சிக்கல்:

கப்பிணி பெண்கள் குளிர்பானங்களை தொடர்ந்து அருந்துவதனால், பிரசவ காலத்திற்கு முன்பே குழந்தை பிற்ப்பதற்கான அபாயம் அதிகம். குளிர்பானங்களில் இருக்கும் கெமிக்கல் பெண்களின் வளர் சிதை மாற்றத்தில் எதிர் வினை புரிவதால் இது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.

உடல் எடை,ஃப்ரி மெச்சூர்:

குளிர்பானங்களை அருந்துவதனால் மேலும் மூளையின் இரசாயன மாற்றம் ஏற்பட்டு ஹைப்பர் ஆக்டிவிற்கு வழிவகை செய்யும். இது உடலின் எடையை அதிகரிப்பதுடன் சீக்கிரமே வயதான தோற்றத்தையும் தரக்குடியது.ல் சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு காரணமாக இருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here