வரட்சியின் காரணமாக நிவாரணம்…! 56,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு….!

30

அதிகரித்து வரும் வரட்சியான கால நிலையால் பாதிக்கப்பட்டோர் 56,000க்கும் அதிகமானோர் என இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களே ஆகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை  வழங்குவதற்காக, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பவுசர் ஊடாக நீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இடர்முகாமைத்துவ நிலையம் கூறுகையில் வரட்சி நிலவும் பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் அறிவிக்குமாறும் மக்களிடம் வளியுறுத்தி உள்ளது.

117 என்ற தொலைபேசி தொடர்பில் கூட தங்களை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வனப்பகுதிளுக்கு தீ மூட்டும் செயற்பாடுகள் வரட்சியை சாதகமாக்கி கொண்டுஅதிகரித்துள்ளதாகவும் அத்தகையோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here